Friday, July 18, 2014

Miracles of Mother Mary in kerala

https://www.youtube.com/watch?v=8uvLjoko_F4

True Miracle at Perambur Church, Lourdu Matha blinking her eyes,

https://www.youtube.com/watch?v=9uVyl5jny0g

Its a Miracle Virgin Mary Statue Comes Alive Mother Mary Under Water

https://www.youtube.com/watch?v=A2YNrNak8b4

இயேசு உருவாக்கிய திருச்சபை

அம்மா மரியே வாழ்க........

"உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்-தொநூ3-15"

படைப்பின் ஆண்டவரால் ,மனுகுலத்தின் மீட்பிற்காக ஆதியிலேயே முன்குறிக்கபட்டவர் தான் மரியாள் என்பதை இந்த இறைவசனம் தெளிவாக்குகிறது.

தாயும் சேயும் சேர்ந்தே,சேய்க்கு துணையாக தாய் நின்றே இவ்வுலக மீட்புபணியெல்லாம் நடைபெறவேண்டும் என்பது கடவுளின் திட்டமாகும்.

புனித கபிரேயல் இறைதூதர் அன்னை மரியாவிடம்

லூகா1 :28 அருள்மிக பெற்றவளே வாழ்க : ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் ,

யார் இந்த கப்ரியல்? கடவுளின் செய்தியை அறிவிக்கின்ற கடவுளின் தூதர்.

லூகா 1:19 நான் கப்ரியல் ஆண்டவரின் திருமுன் நிற்பவன் ; உம்மோடு பேசவும் உமக்கு இந்த நற்செய்தி அறிவிக்கவும் அனுப்பபட்டேன்.

சகலத்தையும் படைத்த கடவுள் அன்னை மரியாளை வாழ்த்தும் போது நாமும் அன்னையை வாழ்த்துவது தானே தகுதியானது.....

இது மட்டுமா .....

லுக்கா 1:30 கடவுளின் அருளை கண்டடைந்து உள்ளீர் .. லுக்கா 1:35 துய ஆவி உம்மீது வரும் : உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நீலலிடும் , ஆதலால் உம்மிடம் பிறக்கபோகும்குழந்தையும் தூயது . அக்குழந்தை இறைமகன் எனப்படும் ...

பைபிள் வரலாற்றில் முதன் முதலில் மூவொரு கடவுளால் வாழ்த்து பெற்றவரும் தம்முடைய கருப்பையில் சுமந்தவரும் அன்னை மரியாள் மட்டுமே ...

சரி பரிசுத்த ஆவியின் துண்டுதலால் இன்னும் நான் இந்த ரகசியத்தை கூறுகிறேன்

"உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நீழலிடும்"

இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

கடவுளின் உடனிருப்பை குறிக்கும் சொற்கள் இவைகள்.

" ஆண்டவரின் மாட்சி அவருடைய இல்லத்தை நீரப்பிற்று " ( 1அரசர் 8:10) என்பது இதே கருத்தை விளக்குகிறது . கடவுளின் உடனிருப்பு அன்னை மரியாவை ஆட்கொண்டது

. அன்னை மரியாள் ஆண்டவர் தங்கும் இடமாகிறார். தூய ஆவியர் அன்னை மரியாவை ஆட்கொண்டதன் மூலமாக , அன்னை மரியா மனித உதவியின்றி , அத்தூய ஆவியாரின் அருளினாலே இயேசுவை கருத்தரிக்கிறார் .....

அன்னைமரியாள் வழியாக நாம்,அருள் உயிர்பெற்று வாழவேண்டும்,
அன்னைமரியாளின் பாதுகாவலினால் நாம் தீயோனிடமிருந்து பாதுகாக்கபடவேண்டும் என மூவொரு திட்டமிட்டதில் வியப்பொன்றுமில்லை.







































Wednesday, July 16, 2014